நாளை ஆடி பெருக்கு திருவிழாவை முன்னிட்டு 2000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது .
ஆடிபெருக்கு திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 11.30 மணிக்குமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடி திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மற்றும் கரூர் வரை செல்வதற்கான சார்த்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் டெல்டா மாவட்டமான கடையமடை வரை செல்வதற்கு வாய்ப்புயில்லை. ஏனென்றால் குடிநீர் தேவைக்காக கரையோர மக்கள் அணையில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது . இந்நிலையில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் டெல்டா மாவட்டமான கடையமடை வரை செல்வதற்கு வாய்ப்பு இல்லை.
மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டில் வினாடிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு 8,000 கன அடி நீர் திறக்கப்பட்டது பின் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆடி பெருக்குக்கு மூன்று நாட்களுக்கு முன் குறைக்கப்பட்டு 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் அதே போன்று இந்த ஆண்டும் திறப்பார்கள் என்று எதிர் பார்த்த நிலையில் அரசின் காலம் தாழ்ந்த முடிவால் கரையோர மக்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். ஆனால் தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து ஆடி பெருக்கு திருவிழாவுக்காக 2,000 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்படுததால் கரையோர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தண்ணீர் திறக்காத காரணமாக பொதுப்பணி துறையினர் கூறுகையில் தமிழகஅரசு எந்தவிதமான தகவலும் கூறவில்லை என்று கூறுகின்றனர் .ஆனால் தமிழகஅரசு கூறினால் மட்டுமே தண்ணிர் திறக்க முடியும் என்ற நிலையில், தண்ணீர் திறப்பதில் ஏன் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது . அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் 2 வது வருடமாக இந்தவருடமும் கரையோர மக்களுக்கு மகிழ்ச்சியான ஆடி பெருக்காக இருந்திருக்கும் . ஆனால் தற்போது முறைப்படி கவனம் செலுத்தாததால் இந்தவருட ஆடி பெருக்கு கரையோர மக்களுக்கு கேள்வி குறியாகவே உள்ளது .