Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  திட்டம் ஒத்திவைப்பு.!!

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம்  ஒத்திவைக்கப்படுவதாக   உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல்தமிழகத்தில்  அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்  கொரானா தடுப்பு நடவடிக்கையால் இந்த  திட்டம் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Categories

Tech |