Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரே மாஃபியா மீரா மிதுன் தான்”… காவல்துறையில் புகார் அளித்த நடிகை ஷாலு…!!


நடிகை ஷாலு காவல்துறை ஆணையரிடம் நடிகை மீரா மிதுனின் தூண்டுதலால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார்.

நடிகை ஷாலுவிற்கு நடிகை மீரா மிதுன் தூண்டுதலால் மிரட்டல்கள் வருவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” மீரா மிதுன் தூண்டுதலின்பேரில் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. அவரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு பதிவு செய்துள்ளேன். சமூகவலைதளங்களில் எனது புகைப்படத்தை பதிவு செய்து தவறாக சித்தரிக்கிறார்.

மாடலிங்கில் அவர் நடவடிக்கை பிடிக்காததால் சிலர் மீரா மிதுன் விலக்கினர். அதற்கு நான் தான் காரணம் என்று பழி வாங்கத் துடிக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே மாஃபியா மீரா மிதுன் தான். அவரிடம் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் பேசினாலும் அதை வைத்து ட்வீட் போட்டு தன்னை பிரபலப்படுத்த முயல்வார். முறையாக நான் புகார் கொடுத்துள்ளேன். காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |