ஒரே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பொது விநியோகத் திட்டங்கள் குறித்து அங்காடிகளில் தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருட்களில் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை சிறப்பான முறையில் கவனித்து வருமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார் இதை தொடர்ந்து படிப்படியாக தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.