கர்நாடாக மாநிலத்தில் ராஜினாமா கடிதம் நிலுவையில் இருப்பதால் MLAக்களை தகுதிநீக்கம் செய்யமுடியாது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சியை சேர்ந்த அதிருப்பதி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான தீவிர நடவடிக்கைகளில் காங்-மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் தீவிரம் காட்டி வந்த நிலையில்,ராஜினாமா செய்த 10 காங்கிரஸ் MLAக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளிக்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய கர்நாடக சபாநாயகர்,MLAக்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் நிலுவையில் இருப்பதால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை என்றும்,இது குறித்து ஆளுநரிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.அதில் 5 பேரின் கடிதங்கள் சரியாக இருப்பதால் அவர்களை நேரில் சந்தித்து ராஜினாமா குறித்து விளக்கம் கேட்க உள்ளதாக தெரிவித்தார்.