Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்டவர் காலமானார்..!!

உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்ட  ஜப்பானை சேர்ந்தவர் 112 வயதில் காலமானார்.

உலகில் தற்போது வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதுடைய நபராக வாழ்ந்து வந்தவர் தான் ஜப்பானைச் சேர்ந்த  சிட்டெட்ஸூ வடனாபே (Chitetsu Watanabe). இவர் கடந்த 1907 ஆம் ஆண்டு நீயிகதா நகரில் பிறந்தார். உலகின் அதிக வயதான நபர் என்ற அவரது சாதனைக்காக, அந்த நகரில் இருக்கும் பராமரிப்பு மையத்தில் அவருக்கு கின்னஸ் சார்பாக கடந்த 12-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

Image result for The oldest known man in the world passed away at the age of 112.

சிட்டெட்ஸூ வடனாபேவின் வயது 112 ஆண்டுகள் 344 நாட்களாக இருந்த போது அவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். தற்போது வரை உலகின் வயதான மனிதராக அறியப்பட்ட இவர் கடந்த ஞாயிறன்று (23-ஆம் தேதி) காலமாகி விட்டதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |