லண்டனில் ஆன்லைல் மூலம் சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
லண்டனை சேர்ந்த சைமன் லேண்ட்ஸ்பெர்க் என்ற 68 வயது முதியவர் கடந்த 2014ஆம் ஆண்டு பல சிறுமிகளை கவர்ந்து தவறாக பேசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் 14 வயது சிறுமிகளுடன் நட்பானார். அவர்களிடம் தனக்கு 43 வயது தான் ஆகிறது என்று பொய் கூறி மிகவும் மோசமான முறையில் பேசி வந்துள்ளார்.
சிறுமிகளை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட சைமன் அவர்களை ஒரு பூங்காவிற்கு வரச்சொன்னார். அதன்படி சைமன் பூங்காவிற்கு ஆர்வத்துடன் சென்றார். அங்கு அவரை சிலர் சுற்றி வளைத்தனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சைமன் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் , அவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஏனென்றால் அனைவரிடமும் ஆன்லைனில் பேசியது சிறுமிகளே அல்ல. அவரை பிடிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இப்படி திட்டமிட்டுள்ளனர். அதன்பின் போலீசில் ஒப்படைக்கப்பட்ட சைமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஆடம் ஹிடஸ்டன் கூறியதாவது, சைமன் சிறுமிகள் என நினைத்து ஆன்லைனில் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார்.
இந்தக் குற்றத்திற்காக இவர் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளார். ஆனால் அதனை எண்ணிப் பார்க்காமல் மீண்டும் இதே செயலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு 44 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் புதிய பாலியல் தீங்கு தடுப்புக்கான உத்தரவையும் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.