இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ல் இருந்து 23,452ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 723 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 500ம் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,814 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 17,915 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க தலைமை செயலாளர் ராஜீவா தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 298ஐ எட்டியுள்ளது. இதில் 70 பேர் குணமாகியுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஏ.ஏ.எஸ்.நகரில் 63, ஜலந்தரில் 63 மற்றும் பாட்டியாலாவில் 55 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 40 பேரில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.