இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் உலக அளவில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி மக்களை பயம் காட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ல் இருந்து 909 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 862 பேர் இந்தியர்கள், 47 பேர் வெளிநாட்டினர் ஆவர். அதேபோல 19 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளனர் என்றும், 80 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.