தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.
அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கொரோனா பாதித்த 40.63% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் 134, திண்டுக்கல்லில் 77, திருநெல்வேலியில் 62 , ஈரோட்டில் 70, திருச்சியில் 50,நாமக்கல் 51, ராணிப்பேட்டை 38, செங்கல்பட்டு 56, மதுரை 50 ,கரூர் 42, தேனி 43, திருவள்ளூரில் 50, தூத்துக்குடியில் 27, விழுப்புரத்தில் 41 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 23,760 பேரும் அரசு கண்காணிப்பில் 155 பேர் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.