Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘மாஸ்க்’ அணியாவிட்டால் 6 மாதம் சிறை – அதிரடி உத்தரவு..!!

உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை என நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் சிலர் அதனை முறையாக பின்பற்றாமல் நமக்கென்ன என்று அசால்ட்டாக சுற்றி திரிகின்றனர்..

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது.

இதில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இன்று 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது. இன்று  அம்மாவட்டத்தில் யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை.. இதுவரையில் 172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இன்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.. இதுவரையில் அம்மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |