ஏவிஎம் புரெடக்ஷனின் அடுத்த தயாரிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிறுவனம் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி திருட்டு கும்பலை மையமாக வைத்து “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற பெயரில் வெப் தொடரை உருவாக்க உள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடர் சோனி லீவ் ஓடிடி தனத்தில் வெளியாக உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த வெப் தொடர் ரிலீசாக உள்ளது.