Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்….. “உருவாகிறது புயல்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற 30_ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

Image result for காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகின்றது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக உருவெடுக்கின்றது. இந்த புயல் இலங்கை கடல் வழியாக வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நெருங்கும். புயல் நெருங்கும் போது காற்றின் வேகம் 1 மணிக்கு 65 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |