சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக வெளியான செய்தி பொய் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த Gosiame Sithole ( 37 ) எனும் இளம்பெண் பிரிட்டோரியா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியானது. மேலும் Gosiame Sithole 10 குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது புதிய சாதனையாக அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் Gosiame Sithole-ன் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் அனைவரும் இது பொய்யாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக குழப்பம் இருந்து வந்த நிலையில் Gosiame Sithole தொடர்பில் தென் ஆப்பிரிக்காவின் Gauteng மகாண அரசு அதிகாரபூர்வமான உண்மை தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் Gosiame Sithole 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறுவது பொய் எனவும், ஒரு குழந்தையை கூட அவர் பிரசவத்தில் பெற்றெடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவர் கர்ப்பமே ஆகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. Gosiame Sithole-க்கு உளவியல், மருத்துவ மற்றும் சமூக ஆதரவு தொடர்ந்து அளிக்கவும், தேவையான ஆலோசனைகள் அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.