Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனிப்பான செய்தி… ஒரேநாளில் கரூரில் 48, கோவையில் 31… மொத்தம் 635 பேர் டிஸ்சார்ஜ்… விவரம் இதோ!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று பாதிப்பு 76 ஆக அதிகரித்தாலும் ஒரே நாளில் 178 பேர் குணமடைந்த செய்தி மக்களுக்கு  மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கின்றது.. இன்று குணமடைந்தவர்களில் அதிகபட்சமாக கரூரில் 48 பேரும், கோவை ESI மருத்துவமனையிலிருந்து 31 பேரும், ஸ்டான்லி MCHல்  இருந்து  26 பேரும், வேலூர் MCH  மற்றும் ஓமந்தூரார் MCHல் இருந்து தலா 20 பேரும், செங்கல்பட்டு MCHல் இருந்து 13 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மதுரை MCHல் இருந்து 8 பேர் , திருச்சியில் 6 பேர் சென்னை MCH மற்றும் ராஜிவ்கந்தி மருத்துவமனையில் இருந்து 5 பேர், திருநெல்வேலி MCHல் ஒருவர் இருந்து என மொத்தம் 178 பேர்  இன்று தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  மொத்தம் 635 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக இதுவரை கோவை மாவட்டம் 106 பேரையும், கரூர் 101 பேரையும் குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதற்கு காரணம்.. ஒருபுறம் சற்று பாதிப்பு அதிகரித்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் மனம் தளராமல் கடுமையான பணியாற்றி இன்று ஒரே நாளில் 178 பேரை மீட்டுள்ளனர். இந்த நல்ல செய்தி நாளையும் தொடரும் என மக்கள் அனைவரும் நம்புவோம்.

இதோ கொரோனாவால் குணமடைந்த மாவட்டங்களின் விவரம் : 

Categories

Tech |