பிரிட்டனில் இன்று முதல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்புப் பட்டியலில் 33 நாடுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நாடுகளில் இருந்து விமானம் மூலம் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில், அவர்கள் மற்ற பயணிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களை அதிகாரிகள் தனிமையில் அழைத்து செல்வார்கள்.
அதன் பின் அவர்கள் கொண்டுவந்த லக்கேஜை கவனமுடன் எடுத்து செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அவர்களின் லக்கேஜை அவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை சரி வரச் செய்யும். பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணியை விமான நிலையத்திலிருந்து அழைத்து சென்று ஒரு பேருந்தில் ஏற்றி விடுவார்கள்.
அந்தப் பேருந்து தனிமைப் படுத்தப்பட வேண்டிய ஹோட்டலுக்கு அவர்களை அழைத்துச் செல்லும். அதன்படி அவர்கள் 1750 பவுண்ட் செலவில் சுமார் 10 நாட்கள் தங்களை ஹோட்டலில் தனிமைப் படுத்திக் கொள்வார்கள். அந்த பத்து நாட்களுக்கு இடையில் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.