Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய தொற்று!”…. ஒமிக்ரான் என்று பெயரிட்ட விஞ்ஞானிகள்….!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள் ஒமிக்ரான் என்று பெயரிட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானாவில், புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. விஞ்ஞானிகள் இது 10 மடங்கு வீரியம் மிக்கது என்று தெரிவித்திருக்கிறார்கள். உலக சுகாதார மையமானது, இந்த புதிய வகை தொற்று வருத்தத்திற்குரிய மாறுபாடு என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாறுபாடு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயன்று வரும் உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. நேற்று இது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில், விஞ்ஞானிகள் இந்த தொற்றிற்கு ஒமிக்ரான் என்று பெயரிட்டுள்ளனர்.

Categories

Tech |