நதிகளை தூர்வாரி மழை நீரை சேகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இன்று சென்னை சாலிகிராமம் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பத்திரிக்கையாளரிடம் பேசினர் அப்போது பல்வேறு அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் நதிகளை தூர்வாரி மழைநீரை சேகரித்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுயமென்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரசாரத்தை தொடங்க இருக்கின்றேன். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் முக.ஸ்டாலினை சந்திப்பது வழக்கமானது என்று தெரிவித்த அவர் எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுமென்று தெரிவித்தார்.