ஓடும் பஸ்ஸில் 45 பயணிகளின் மத்தியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உ.பி காவல்துறையிடம் தேசிய பெண்கள் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்திலிருந்து நேற்று டெல்லி தேசியத் தலைநகர் பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.. இந்த பேருந்தில், டெல்லியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அதில், “உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற மோசமான, கொடூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலையளிக்கிறது.. இந்த விவகாரத்தில் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆரம்பத்திலிருந்து இந்தச் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட அனைத்து வித நடவடிக்கைகளையும் ஒரு விரிவான அறிக்கையாக தயார் செய்து தங்களுக்கு அனுப்ப வேண்டும்” என்று கோரியுள்ளார்.