Categories
மாநில செய்திகள்

“பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும்”… தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.!!

தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Image result for National Child Rights Protection Commission

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Image result for Deep well

குழந்தைகளின் பாதுகாப்புக்கு அனைத்துத் தரப்பினரும் அதிக முக்கியத்துவம் அளித்து, பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |