Categories
உலக செய்திகள்

சீனாவில் 65 அடி நீளமுள்ள அனகோண்டா?… பதில் கிடைத்து விட்டது..!!

சீனாவில் ஆற்றில் இருந்தது அனகோண்டா என்று நினைத்த அனைவருக்கும் பதில் கிடைத்துள்ளது.  

சீனாவில் உள்ள கார்ஜஸ் அணையில் 65 அடி நீளத்தில் மர்மமான ஒரு உயிரினம் ஊறிச் செல்வதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை  60,00,000 – த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனை கண்ட பலரும் இது என்ன உயிரினம் என்று வியப்பில் ஆழ்ந்தனர்.

Image result for A viral video that sparked theories of a Chinese Loch Ness

சிலர் இது ஒரு மிகப்பெரிய அனகோண்டாவாகவோ அல்லது ராட்சத மீனாகவோ இருக்கலாம் என சந்தேகத்தின் படி தெரிவித்தனர். அதிலும் இந்த வீடியோ என்றைக்கு எடுக்கப்பட்டது என்றே தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவை தெரியாமலேயே இது ஒரு மர்ம உயிரினம் எனக் கூறி ஆச்சர்யத்துடன் பலரும் பகிர்ந்து வந்துள்ளனர்.

Image result for A viral video that sparked theories of a Chinese Loch Ness

இந்நிலையில் இந்த புதிருக்கு விடை கிடைத்தது. அனகோண்டா என நினைத்த அந்த மர்மம் கரையொதுங்கியதும்  அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர். அப்போது தான் அது அனகோண்டா இல்லை என்று தெரிய வந்தது. அப்போ அது என்னவென்று கேட்கிறீர்களா. அது ஒரு தொழிற்சாலைக் கழிவாக வெளியேற்றப்பட்ட காற்றுப் பை. இப்போது அனைவருக்கும் அது என்னவெண்டு தெரிந்தது. அதனை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Categories

Tech |