Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒருபக்கம் கடன் கொடுத்தவர்கள்… மறுபுறம் மாமியார் தொந்தரவு… பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை..!!

தேவகோட்டை அருகே 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாதபுரத்தில் ராமதாஸ் என்பவர் வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் 2 மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி பிரியதர்ஷினியுடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமதாஸ்இறந்து போனார். கணவர் இறந்த பின்னரும் பிரியதர்ஷினி தன்னுடைய 3 பிள்ளைகளுடன்  அதே வீட்டில் வசித்துவந்தார்.

இதற்கிடையே ராமதாசுக்கு கடன்கடுத்தவர்கள் கடனை திரும்ப செலுத்துமாறு பிரியதர்ஷியினிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். அதேபோல மாமியார் வசந்தாவும், வாடகை பணத்தை கேட்டு அவரை வீட்டை விட்டு வெளியே போகுமாறு வற்புறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வசந்தாவின் தம்பி ராஜேந்திரனும் பிரியதர்ஷினியை மிரட்டி வாடகை பணத்தை கேட்டு, கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு பிரியதர்ஷினியின் மகளது கையை பிடித்து முறுக்கி துன்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்து போன பிரியதர்ஷனி, தன்னுடைய பிள்ளைகள் பர்வதவர்த்தினி (16), திருநீலகண்டன் (14) மற்றும் ஹரிகிருஷ்ணன் (12) ஆகிய மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம்குடித்துள்ளார்.. இதில், பிரியதர்ஷினி இறந்த நிலையில், பிள்ளைகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், மகள் பர்வதவர்த்தினி மற்றும் மகன் திருநீலகண்டன் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.. ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தசம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |