2019 -ம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் #Viswasam என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களுள் ஒன்றான ட்விட்டரில் தினந்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ட்விட்டரின் முக்கிய அம்சமே ட்ரெண்டிங் தான். ஏதாவது முக்கிய விஷயங்கள், பிரபலங்கள் பிறந்த நாள், புதிய படம், படம் குறித்த ஏதாவது அறிவிப்பு, அரசியல் பிரபலங்கள் பெயர்கள் என நாள் தோறும் ஏதாவது ஓன்று ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும்.
இப்படி அடிக்கடி ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும் விஷயங்களில் தல அஜித் அடிக்கடி இருப்பார். இவரது படம், பட பாடல்கள் மற்றும் படம் குறித்த அறிவிப்புகள் ஏதாவது வெளியானால் உடனே அஜித் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். மற்ற படங்கள் குறித்த ஏதாவது ட்ரெண்ட் ஆனாலும் சரி குறிப்பாக விஜய் படம் குறித்து ட்ரெண்ட் ஆகும் நாளில் கண்டிப்பாக தல அஜித்தின் ட்ரெண்டிங் இருக்கும். அந்த அளவிற்கு தல ரசிகர்கள் ட்விட்டரில் முழு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதனை தற்போது நிரூபிக்கும் வகையில் ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்றைய தினம் ஹேஸ்டேக் டே என்று பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அளவில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட முதல் 5 ஹேஸ்டேக்குகளை வெளியிட்டுள்ளது.
அதில் முதலிடத்தை அஜித் நடித்திருந்த விஸ்வாசம் (#Viswasam) திரைப்படம் பிடித்துள்ளது. 2 -ஆவது இடத்தை 2019 ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் (#LokSabhaElections2019) பிடித்துள்ளது. 3-ஆவது இடத்தை 2019 உலக கோப்பை (#CWC19) பிடித்துள்ளது. 4-ஆவது இடத்தை மஹர்ஷி (#Maharshi) பிடித்துள்ளது. 5-ஆவது இடத்தை புதிய முகப்பு படம் (#NewProfilePic) பிடித்துள்ளது.
https://twitter.com/TwitterIndia/status/1164841555565268994