Categories
உலக செய்திகள்

இன்று சென்றடையும்……. விண்வெளியில் சமையல் செய்ய…… அதிநவீன சாதனம்……!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட அதி நவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது.

அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வதேச விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் ஆகியவற்றை அமெரிக்கா வெர்ஜினியா பகுதியிலிருந்து 3.7 டன் எடை கொண்ட சைக்னஸ்விண்கலம் மூலம் அனுப்பி வைத்தது.

Image result for சைக்னஸ் விண்கலம்

இந்நிலையில் சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பம் ஈர்ப்புவிசை இல்லாத நிலை ஆகிய சூழ்நிலையில் பிஸ்கட் சுடும் பொழுது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஆராய உள்ளனர். மேலும் கதிரியக்கத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் உடை மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |