Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்கும் மிக முக்கிய சோதனை… ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தும் சுவிஸ்…!

சுவிட்சர்லாந்து மத்திய அரசு உமிழ் நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்துகிறது என அறிக்கை வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள உமிழ் நீர் சோதனை மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 முதல் 65 வயதுடைய அனைவரும் ஒவ்வொரு வாரமும் உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த சோதனை அங்கீகரிக்கப்பட்டு நீண்டகாலமாக அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா ஆன்டிஜென்களுக்கான உமிழ்நீரை 10 நிமிடங்களுக்குள் பகுப்பாய்வு செய்யும் எளிய சோதனைக்கான ஒப்புதலுக்கு பொது சுகாதாரத்திற்கான மத்திய அலுவலகம் விண்ணப்பித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு உமிழ்நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது என சோன்டாக்ஸ் ஜீதுங் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |