சிண்டிகேட் வங்கியில் பல்வேறு பணிக்கு 129 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிண்டிகேட் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் என்ற இரு பிரிவுகளின் கீழ் 129 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணிகள் :
சீனியர் மேனேஜர் (Risk Management)
மேனேஜர் (Risk Management)
மேனேஜர் (Law)
மேனேஜர் (Audit)
செக்யூரிட்டி ஆபீஸர்
காலிப்பணியிடங்கள் :
சீனியர் மேனேஜர் (Risk Management) 05
மேனேஜர் (Risk Management) 50
மேனேஜர் (Law) 41
மேனேஜர் (Audit) 03
செக்யூரிட்டி ஆபீஸர் 30
விண்ணப்பிக்கும் தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி 18.04.2019
ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் 18.04.2019
சம்பளம் :
சீனியர் மேனேஜர் பணிக்கு 31 , 701 முதல் அதிகபட்சமாக 45, 950 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
மற்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் 40,020 முதல் அதிகபட்சமாக 51,490 மாத சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு :
குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வரை இருத்தல் வேண்டும். செக்யூரிட்டி ஆபீசர் பணிக்கு மட்டும் அதிக பட்சம் 45 வரை இருக்கலாம் .
தேர்வு கட்டணம் :
S/C , S/T எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 100+GST
பொதுப்பிரிவு மற்றும் OBC_க்கு ரூபாய் 600 + GST
தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். செலுத்திய தேர்வு கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்பட இயலாது.
கல்வித்தகுதி :
சீனியர் மேனேஜர் (Risk Management) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியல் படிப்புடன் M.B.A ( பேங்கிங் , பைனான்ஸ்) பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் மூன்று வருட வங்கித் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் .
மேனேஜர் (Risk Management)பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியல் படிப்புடன் M.B.A ( பேங்கிங் , பைனான்ஸ்) பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 1 வருட வங்கித் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
மேனேஜர் (Law) பணிக்கு இளங்கலை சட்டம் பட்டப்படிப்பை பயின்று குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேனேஜர் (Audit ) பணிக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்று கூடுதலாக CISA/ OSCP / CEH போன்ற சான்றிதழ் படிப்பையும் அத்துடன் குறைந்தபட்சம் நான்கு வருடம் துறை சார்ந்த பணி அனுபவம் அவசியம் .
செக்யூரிட்டி ஆபீஸர் பணிக்கு இந்திய ராணுவத்தில் குறைந்தபட்சம் 5 வருடம் அதிகாரி பணியோ அல்லது 5 வருடம் போலீஸ் அதிகாரியாகவோ பணியாற்றியவர் இந்த பணிக்கு தகுதியானவர் .
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ஆன்லைனில் https://ibpsonline.ibps.in/synvpbkmar19/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு நடைபெறும் முறை :
4 பிரிவுகளின் கீழ் 200 கேள்விகள் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு 2.30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
மேலும் இதுகுறித்த முழுமையான தகவல்களுக்கு https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf என்ற இணையதளத்தை சென்று பார்க்கலாம் .