Categories
கால் பந்து விளையாட்டு

சென்னையின் எஃப்சிக்கு எதிரான போட்டி – முதல் பாதியில் எஃப்சி கோவா முன்னிலை ….!!

ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று நடைபெற்றுவரும் நான்காவது போட்டியில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் மோதின. கடந்த சீசனில் இரண்டாவது இடம் பிடித்த கோவா அணியை, அதே தொடரில் கடைசி இடம்பிடித்த சென்னை அணி எதிர்கொண்டதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஜவஹர்லால் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் இருந்தே கோவா அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. சென்னை அணி வீரர்களும் இதற்கு பதிலடி தரும்படியாக எதிரணியின் கோல் வாய்ப்புகளை டிபென்சிவ் முறையில் தடுத்தனர். ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் கோவா அணி வீரர் லென்னி ரோட்ரிக்ஸ்க்கு எதிரணி வீரரை தடுக்க முயற்சித்ததற்காக மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

Image

தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது. பின்னர் 30ஆவது நிமிடத்தில் கோவா வீரர் செமின்லென் டாங்கெல் கோலடித்து தங்கள் அணியை முன்னிலைப் பெறச் செய்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் கோவா அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.இரண்டாம் பாதியில் சென்னை அணி வீரர்கள் கோலடித்து டிரா செய்வார்களா அல்லது வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Categories

Tech |