14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர், நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆட்டை அவிழ்த்து வருவதற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்தமாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இதனால் அவரது தாயார் அந்த பகுதியில் மகளை தேடியுள்ளார்.
பின்னர் போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜான்சனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர் என்பதும், இன்று வீட்டில் தனியாக இருந்த ஜான்சன், அவ்வழியாகச் சென்ற சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது.. தொடர்ந்து ஜான்சனைக் கைதுசெய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.