விமானத்தில் பணிப்பெண்கள் கையை பின்னால் மடக்கி வைத்திருப்பதற்கான காரணம் குறித்து இப்போது பார்க்கலாம்.
விமானத்தில் செல்லும்போது விமான பணிப் பெண்கள் தங்கள் கையை முதுகுக்கு பின்னால் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறோம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். விமானப் பணிப் பெண்களுக்கு விமானத்தில் நிறைய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்புகளில் ஒன்று கையை பின்னால் மடக்கி வைப்பதும். இது ஏன்? என்று நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். இதற்கு கரணம் என்னவென்றால் அவர்கள் தங்களுடைய கையில் கவுண்டர் ஒன்றை மறைத்து வைத்திருப்பதே ஆகும்.
விமானத்தில் ஏறும் பயணிகள் எண்ணிக்கையை உறுதி செய்வதற்காக இந்த கவுண்டரை விமான பணிப்பெண்கள் பயன்படுத்துகிறார்கள். விமானத்தில் ஒவ்வொரு பயணி புதிதாக ஏறும்போதும் அந்த கவுண்டரை அவர்கள் ஒருமுறை கிளிக் செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் எத்தனை பயணிகள் ஏறி இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு குழப்பமில்லாத தெளிவான எண்ணிக்கை கிடைக்கும். இந்த கவுண்டர்கள் கைக்கு அடக்கமாக இருப்பதால் விமானப் பணிப்பெண்கள் முதுகுக்கு பின்னால் வைத்துக்கொண்டு மடித்து வைத்துக் கொண்டே நடந்து செல்வதை நாம் பார்க்க முடியும்.