வீட்டின் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரகத்தாயம்மாள் நகரில் ஆசிர்வாதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜென்சி கிறிஷ்டினா என்ற மகள் உள்ளார். கடந்த ஆகஸ்ட் 20 – ஆம் தேதியன்று ஜென்சி கிறிஷ்டினாவிற்கும் மதுரையில் வசிக்கும் ரவின்சித்தார்த் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டிலிருந்தும் 30 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஜென்சி கிறிஷ்டினா தான் அணிந்திருந்த 16 பவுன் தங்க நகையை பீரோவில் வைத்துப் பூட்டியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நகை மாயமானதை கண்டு வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஆசீர்வாதம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.