Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் மாயமான கர்ப்பிணி பெண்… காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் 37 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் திடீரென மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷையர் என்ற பகுதியில் வசித்து வந்த எலிசபெத் கில்லிவர் (37) என்ற பெண் நிறைமாத கர்ப்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு Fradley கிராமத்தில் இறுதியாக தென்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் மாயமானது தொடர்பில் தங்களது விசாரணைக்கு உதவுமாறு ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அப்பெண்ணின் புகைப்படம் ஒன்றையும், அவர் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அதில் அந்த கர்ப்பிணி பெண் 5.5 அடி முதல் 5.7 அடி உயரம், பழுப்பு நிற முடி, வெள்ளையாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் வெளியிட்ட அந்த அறிக்கையில் அந்தப்பெண் இறுதியாக வெளிர் சாம்பல் ஜாகிங் பாட்டம்ஸ், அடர் நீல அடிடாஸ் ஜிப்-அப் ஜாக்கெட் அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த கர்ப்பிணி பெண் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |