Categories
அரசியல் மாநில செய்திகள்

“குளம் குட்டையில் மலரும் தாமரை” தமிழகத்தில் மலராது…. திருமாவளவன் விமர்சனம்….!!

தாமரை குளம் , குட்டையில் மலரும் தமிழகத்தில் மலராது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடவில்லை.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பிஜேபி 5 மக்களவை தொகுதியில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிட்ட 38 இடங்களில் 37_யை வென்றது. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில் ,  தாமரை குளம் குட்டையில் வேண்டுமானால் மலரும் தமிழ் நிலத்தில் ஒரு போதும் மலராது என்று விமர்சனம் செய்துள்ளார்.

 

Categories

Tech |