திடீரென சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே பொங்கலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைஷிகா ஸ்ரீ (5) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய பாட்டி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்து மயங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் கதறி அழுக சம்பவம் பார்ப்போரின் மனதை கண் கலங்க வைத்தது. மேலும் திடீரென ஒரு சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பகுதிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.