அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் .
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .
தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் போட்டியிடுகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று காலை வெளியிட்டார்.
இதையடுத்து இன்று காலை அதிமுக_வின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது .அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது . இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதிகளின் 20 வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் ,
சேலம்- சரவணன்
நாமக்கல்- சுந்தரம்
கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி
ஈரோடு- செல்வகுமார்
கரூர்- தம்பிதுரை
திருப்பூர் – ஆனந்த்
பொள்ளாச்சி – மகேந்திரன்
ஆரணி- கண்ணன்
திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சிதம்பரம்- எம்பி சந்திரகாசு
பெரம்பலூர் – NR சிவபதி
தேனியில்- ரவீந்திரநாத்
மதுரை – கோபாலகிருஷ்ணன்
நீலகிரி- சரவணகுமார்
நாகை -மனோஜ் பாண்டியன்
மயிலாடுதுறை- பாரதிமோகன்
திருவள்ளூர்- வேணுகோபால்
காஞ்சிபுரம்- எம்பி மரகதம் குமரவேல்
தென்சென்னை- ஜெயவர்த்தனே