Categories
அரசியல்

கருணாநிதி சமாதியில் வேட்பாளர் பட்டியல் …… சிறிது நேரத்தில் அறிவிக்கிறார் ஸ்டாலின்…!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்  திமுக 20 , காங்கிரஸ் 10 , சிபிஎம் 2 , சிபிஐ 2 , விசிக 2 , மதிமுக 1 , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 , இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகின்றது . எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுகின்றார் என்ற வேட்பாளர் பட்டியலை இடதுசாரிகள் , மதிமுக  மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்து  போட்டியிடும் தொகுதிகளை நேற்று முன்தினம் முக.ஸ்டாலின் அறிவித்தார்.

Image result for கருணாநிதி சமாதி

 

அதில் , மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் சென்னை வடக்கு , சென்னை தெற்கு , மத்திய சென்னை , ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி) ,  அரக்கோணம் , வேலூர் , தர்மபுரி , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , சேலம் , நீலகிரி (தனி) , பொள்ளாச்சி , திண்டுக்கல் , கடலூர் , மயிலாடுதுறை , தஞ்சாவூர் , தூத்துக்குடி  , தென்காசி (தனி) , திருநெல்வேலி ஆகிய இருபது தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது உறுதியாகியது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை இன்னும் சில நேரத்தில் அறிவிக்க இருக்கிறார். இதற்க்கு முன்னதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் , துரை முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் பட்டியலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினர். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறார்.

Categories

Tech |