2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்தப் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பதை பார்ப்போம்.
அம்மாவாசை நாளில் சூரியன் சந்திரன் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் நம்மால் காணமுடியாது. டிசம்பர் 14ம் தேதி முழு சூரிய கிரகணம் தென்னமெரிக்கா நேரப்படி பகல் 1 மணி 33 நிமிடத்திற்கு தொடங்குகிறது. இது இந்திய நேரத்திற்கு இரவு 7 மணி 3 நிமிடத்திற்கு தொடங்குகிறது. முழு சூரிய கிரகணத்தை தென்னமெரிக்க நாடுகளில் பகல் 2 மணி 32 நிமிடத்திற்கு அடையும்.
இந்திய நேரப்படி 8 மணி 2 நிமிடத்தில் அடையும். இந்த முழு சூரிய கிரகணம் மாலை 4 மணி முதல் 13 நிமிடம் நீடிக்கிறது. இந்திய நேரப்படி அது 9 மணி 43 நிமிடத்திற்கு கிரகணம் முழு உச்சியில் இருக்கும். மேலும் இரவு 11 மணி 24 நிமிடத்தில், கிட்டதட்ட 4 மணி நேரத்திற்கு சூரிய கிரகணம் நீடிக்கிறது. தென்னாபிரிக்காவில் காலை நேரத்தில் நிகழ்வதால் அங்குள்ளவர்கள் தெளிவாக பார்க்க முடியும். இந்திய நேரப்படி அது இரவு நேரம் என்பதால் நம்மால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.