உலகின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குஜராத்தில் கட்டி வருகிறார்.
அம்பானி குடும்பத்தின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாகும் இந்த விலங்கியல் பூங்கா, 2023 ஆம் ஆண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள் மற்றும் பறவைகள் எனச் சுமார் 100 வகையான விலங்கினங்கள் இதில் இடம்பெறுகின்றன.
இதுகுறித்து ரிலையன்ஸ் குழும கார்ப்ரேட் விவகாரம் பிரிவு இயக்குனர் பரிமல் நத்வானி கூறும்கையில் , “இந்தப் பூங்கா ‘கிரீன்ஸ் ஜூவாலஜிகல், ரெஸ்க்யூ அன்ட் ரிஹாபலிடேஷன் கிங்டம்’ என அழைக்கப்படும். 2023 ஆண்டில் இது திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.