முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மங்கள் இரண்டு நாளில் தெரியவருமென்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
அமமுக_வில் இருந்து திமுக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் வந்து முக.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த பதவியும் , பொறுப்பும் கேட்கவில்லை.கட்சியில் என்னுடைய உழைப்புக்கு பெரிய பதவி ஸ்டாலின் கொடுத்ததை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.
பொதுவாக மாற்றுக் கட்சியில் இருந்தது வந்த ஒருத்தருக்கு பதவி கொடுக்கும்போது விமர்சனங்கள் எழும் திமுகவில் பதவி கொடுத்த அதிமுக அமைச்சர் ஜெய்குமாருக்கு என்ன? ஆடு நனையுதுன்னு ஓநாய் கவலைப்படக்கூடாது இது அமைச்சரின் பதவிக்கு அழகல்ல. முதல்வர் லண்டன் , அமெரிக்கா போனதுல ஏதோ ஒன்னு இருக்கு. முதல்வர் ஏன் வெளிநாடு போனார் என்று எனக்கு சில கருத்து வந்து கொண்டு இருக்கின்றது. இரண்டு நாளில் அதற்கான மர்மம் உடையும் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.