ஜார்க்கண்டில் கணவருடன் பேசிவிட்டு பின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தியா தேவி என்ற பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற இருக்கிறது.. திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இதனால் சில மாதங்களுக்கு முன்பு தான் மனைவி தியாவை அவரது தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார் கணவர்.. இதனை விரும்பாத தியா மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்..
இந்த நிலையில்தான் கடந்த 8ஆம் தேதி இரவு கணவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் தியா.. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னுடைய அறைக்கு தேவி தூங்க சென்றுள்ளார்..
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாக தியா அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. அதன்பின் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..