ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய உருளைக்கிழங்கு மூட்டைக்குள் பாம்பு ஓன்று உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வூல்வொர்த்ஸ் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனம் (Woolworths Supermarkets) பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் கிளைகளுள் ஒன்றான வூல்வொர்த்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மரிசா டேவிட்சன் (Marissa Davidson) என்ற இளம்பெண் ஒருவர் 4 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கினார். பின்னர் அப்பெண் மூட்டையை வீட்டில் வைத்து பிரித்து பார்த்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அதிலிருந்து, ஒரு பாம்பு திடீரென வெளியேறி வீட்டினுள் நாலாபுறமும் ஓடியுள்ளது. பாம்பை பார்த்து அச்சமடைந்தாலும், அப்பெண் வீட்டிலிருந்த கம்பை வைத்து அதனை அடித்து கொன்றுவிட்டார் வீரப்பெண்மணி. மேலும் உருளைக்கிழங்கு மூட்டை மற்றும் பாம்பு இரண்டையும் புகைப்படம் எடுத்து வூல்வொர்த்ஸ் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவியதை அடுத்து அந்நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.