Categories
தேசிய செய்திகள்

“தொடர்ந்து நச்சரித்த கந்துவட்டி கும்பல்”… சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்த ஆசிரியர்… அதிர்ச்சி சம்பவம்..!!

பனஸ்கந்தா மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்து கடனை அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தின் தராத் கோடா என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் ராஜபாய் புரோஹித்.. இவர் ஒரு தனியார் கந்துவட்டி கும்பலிடமிருந்து 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.. ஒரு வருடத்தில், வட்டியுடன் அசல் தொகை இரண்டு மடங்காகி விட்டது..

நிலுவைத் தொகையை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.. இதனால் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார் அந்த ஆசிரியர்.. அதற்காக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.. இந்த சூழலில் தான் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சிறுநீரகத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளார்.. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து ஆசிரியர் புரோஹித் இலங்கைக்குச் சென்று தனது சிறுநீரகத்தை 15 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

பின்னர் புரோஹித் தான் வாங்கிய அசலுடன் சேர்த்து வட்டி பணத்தையும் கந்துவட்டி கும்பலுக்கு கொடுத்து செட்டில் செய்து விட்டார்.. ஆனால், கந்துவட்டி கும்பல் அவரிடமிருந்து அதிக பணம் தருமாறு கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளனர்.. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த ஆசிரியர், போலீசாரின் உதவியை நாட முடிவெடுத்து, புகார் கொடுத்தார்..

அதைதொடர்ந்து தன்னிடம் அதிக பணம் வசூல் செய்த ஹர்ஷத் வஜீர், தேவா ரபாரி, ஓகா ரபாரி மற்றும் வஸ்ரம் ரபாரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. போலீசார் இந்த வழக்கை விசாரணை நடத்த தொடங்கியபோதுதான் ஆசியர் இலங்கைக்குச் சென்று சிறுநீரகத்தை விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது.

Categories

Tech |