Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீட்தேர்வு ஹால்டிக்கெட் வரவில்லை… கடுமையாக திட்டினாரா அப்பா?… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே இருக்கும் டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா 12ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார்.. இதனையடுத்து ஹரிஷ்மாவுடன் பயின்ற சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது.. ஆனால் அவருக்கு மட்டும் ஹால்டிக்கெட் வரவில்லை..

இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.. இருப்பினும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில், நேற்று நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது.. மாணவி வயிற்று வலி பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது அப்பா போலீஸ் ஸ்டேஷனில்  தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சக மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது, ஹால் டிக்கெட் வராததால் ஹரிஷ்மாவை அவரது அப்பா கடுமையாக திட்டியதாக சொல்லப்படுகிறது.

இதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக புகார் எழுந்துள்ளது.. இதனிடையே, மாணவி ஹரிஷ்மாவின் ஊர் கிராமம் என்பதால் ஹால் டிக்கெட் தாமதமாக வந்துள்ளது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |