மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருந்த சொந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை மயிலாப்பூரில் மனைவியுடன் திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலை செய்துள்ளார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. ஆம், சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தைச் சேர்ந்தவர் தான் பழனி.. ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும், மரியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறது.. சில ஆண்டுகளுக்கு முன்னதாக கணவர் பழனிக்கு தீ விபத்து ஏற்பட்டதில் காயம் ஏற்பட்டது..
இந்த சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பழனியின் தம்பியும், ஆட்டோ டிரைவருமான செந்தில் குமார், அண்ணன் மனைவி என்றும் பாராமல் மரியாவுடன் திருமணத்தை தாண்டிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.. மரியாவும் கணவருக்கு துரோகம் செய்கிறோமே என்று குற்ற உணர்ச்சி இல்லாமல் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்..
இதனை அறிந்து கொண்ட பழனி, தன்னுடைய தம்பி செந்தில் குமாருக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணமும் செய்துவைத்தார்.. சரி இனியாவது செந்தில் திருந்தி விடுவார் என்று நினைத்தால் அதுதான் இல்லை.. மீண்டும் அந்த உறவு தொடர்ந்துள்ளது.. செந்தில் குமார்- மரியா இடையேயான தகாத உறவை அறிந்த அந்தப் பெண் (செந்தில் மனைவி) சில ஆண்டுகளுக்கு முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகின்றது.
இதனால் செந்தில் குமாருக்கும், மரியாவுக்கும் இடையேயான பழக்கம் மீண்டும் வலுப்பெற்று விட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதையடுத்து, மரியா குழந்தைகளுடன் பிரிந்து சென்று, தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து வருகின்றார்.. மேலும் செந்திலோடு தான் எடுத்த போட்டோக்களை கணவர் பழனிக்கு அனுப்பி வைத்து, கோபத்தை தூண்டியுள்ளார். இந்த சூழலில், சில நாட்களுக்கு முன், மயிலாப்பூர் பகுதிக்கு வந்த மரியா, செந்திலை பார்ப்பதற்காக வீட்டுக்குச் சென்றார்.
அப்போது மீண்டும் தகராறு ஏற்படவே செந்தில், அண்ணன் பழனியைப் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, மரியா தன்னுடைய செருப்பால் பழனியை அடித்து கேவலப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தால் மிகுந்த அவமானமடைந்த பழனி, நேற்று முன்தினம் இரவு தனது தம்பி செந்தில் குமார் குடிபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்..
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த மயிலாப்பூர் போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பட்டினப்பாக்கம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பழனியைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தம்பியுடன் சேர்ந்து மனைவி செருப்பால் அடித்ததால் கொன்று விட்டேன் என்று வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது.