ஊரடங்கு காரணமாக அப்பார்ட்மெண்ட்டுக்குள் தனது நண்பனை அனுமதிக்காததால் மாணவன் ஒருவன் பெரிய சூட்கேசில் வைத்து அடைத்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வரும் மாணவன் ஒருவன் வெளியில் சென்று விட்டு பின் பெரிய கனத்த சூட்கேசுடன் வந்துள்ளான். அந்த மிகப் பெரிய சூட்கேசில் அசைவுகள் இருப்பதை கண்ட பாதுகாவலர் சந்தேகமடைந்து அதைத் திறந்து திறந்து காட்டும்படி கூறியுள்ளார்.
ஆனால் அவன் அதை திறந்து காட்ட மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளான். இதையடுத்து சந்தேகமடைந்த அந்த பாதுகாவலர் அப்பார்ட்மென்டில் இருக்கும் முக்கியஸ்தர்களை அழைத்து விவரத்தை கூறியிருக்கிறார். அவர்கள் வந்து சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது அந்த சூட்கேசுக்குள் அந்த மாணவனின் நண்பன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.