திருச்சியில் கொரோனவால் இறந்தவர் சடலத்தை திறந்தவெளியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆம்புலன்சில் இருந்து சடலத்தை எடுத்து வருவோர் பாதுகாப்பு உடையின்றி வந்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் மட்டுமே முழுவதுமாக பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளார்.
மற்ற இருவரும் முகக் கவசம் அணிந்த நிலையில் சாதாரண உடையிலேயே இருந்தனர். மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ண துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வாறு கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலத்தை திறந்த வெளியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயிரிழந்தவர் நிஜமாகவே கொரோனா பாதித்தவரா? இல்லை வேறு குறைபாடுகளால் உயிரிழந்தாரா? என்பது குறித்தும் தெளிவான விவரங்கள் இல்லை. இந்த நிலையில், கொரோனவால் உயிரிழந்தவர் உடல் கையாளப்பட்ட முறை குறித்து தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
x`மேலும் தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக திருச்சி ஆட்சியர் கூறியுள்ளார். கொரோனவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, மயானத்தில் 8 அடி குழி தோண்டி உடல் புதைக்கப்பட்டதாக திருச்சி ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ளார்.