நான்கு வயது சிறுமியை இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நகரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் எட்டு வயது சிறுவனையும் 12 சிறுவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் பரிசோதனைக்காக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது