பெருந்துறை அருகே உள்ள ஒரு முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள புங்கம்பாடி பகுதியிலுள்ள, முட்புதரில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அங்கு ரத்த காயங்களுடன் அழுகிய நிலையிலிருந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுபோதையில் முட்புதருக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கொலை செய்து விட்டு ரத்தக் காயங்களுடன் முட்புதருக்குள் வீசிச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும், ரத்தக் காயங்கள் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், பிரேதபரிசோதனைக்கு பிறகே அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.