இளம்பெண்ணை மருந்து இல்லாத ஊசி மூலம் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஷைனி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெபராஜ் என்பவருக்கும் ஷைனிக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஷைனி விருப்பம் தெரிவிக்க அவரது இரண்டாவது கணவரும் மாமனார் மாமியாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரையும் அவரது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். அதோடு ஷைனியை கொலை செய்ய முடிவுசெய்து அவரது மாமியார் இரவு நேரத்தில் அவருக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளார் அதைக் குடித்து ஷைனி மயங்கி விழ ஜெபராஜ் மருந்து இல்லாத காற்று நிரப்பப்பட்ட ஊசியை ஷைனியின் உடம்பில் இரண்டு முறை குத்தியுள்ளார்.
ஆனால் மறுநாள் காலை எப்போதும் போல் எழுந்து வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால் ஆனால் ஊசி போட்ட இடத்தில் வலி இருந்ததால் குழந்தையை எடுத்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கு சென்றதும் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
மருத்துவர்கள் அவரது உடலில் காற்று புகுத்தப்பட்ட ஊசி போடப்பட்டதாக கூறியுள்ளனர் அதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உண்டு என்றும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தனது கணவர் ஜெபராஜ் தான் தனக்கு ஊசி செலுத்தியுள்ளார் என்பது தெரியவர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷைனியின் கணவர் ஜெபராஜ், மாமியார் ஜெஸ்டின் மற்றும் மாமனார் சௌந்தர்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்