பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா கடந்த 25ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேஜல் சர்மா குறித்த கூடுதல் விவரங்களை இந்த புகைப்பட செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா. மும்பையில் வாடகை குடியிருப்பில் தோழியுடன் வசித்துவந்தார்
பிரபல இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தில் தோ ஹேப்பி ஹை ஜி’ என்ற தொடரில் நடித்து வந்தார் சேஜல் சர்மா

மாடலிங் துறையில் பணியாற்றி, பிறகு சின்னத்திரையில் நுழைந்தார் சேஜல்

கடந்த 25ஆம் தேதி சேஜல் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார் சேஜல்

பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதை அடுத்து சேஜல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது
நடிகை சேஜல் சர்மாவின் தற்கொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து கடந்த 2017ஆம் ஆண்டு திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சேஜல் மும்பைக்கு வந்திருக்கிறார்
தொலைக்காட்சி தொடருக்கு முன்பு சில விளம்பரப் படங்களிலும் சேஜல் நடித்துள்ளார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானுடன் சேஜல் சர்மா
கிரிக்கெட் வீரர் பாண்டியாவுடன் சேஜல் சர்மா