ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் ,தற்போது ‘தி ஹண்ரட்’ என்ற கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.
இங்கிலாந்தில் ‘தி ஹண்ரட்’ என்ற புதிய கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த புதிய தொடரில் ,ஒரே இன்னிங்சில் மொத்தம் 100 பந்துகள் மட்டும் வீசப்படும். இந்தப் புதிய தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்க உள்ளது என்பது பற்றி தெளிவான தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்தத் தொடரில் 68 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
‘தி ஹண்ரட்’ தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சார்பாக ஹர்மன்பிரீத், ஸ்மிருதி மந்தனா உட்பட 5 வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் இந்த தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளவர்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார். கெவின் பீட்டர்சன், குமார் சங்ககாரா, வாசிம் அக்ரம், பிளின்டாஃப், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருடன் தினேஷ் கார்த்திக்கும் இணைகிறார்.